அதிமுகவை கைப்பற்ற சசிகலா விரிக்கும் வலை; ஒருபோதும் சிக்க மாட்டோம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

அதிமுகவை கைப்பற்ற சசிகலா விரிக்கும் வலை; ஒருபோதும் சிக்க மாட்டோம்!

அதிமுகவை கைப்பற்ற சசிகலா விரிக்கும் வலை; ஒருபோதும் சிக்க மாட்டோம்!




தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமர்கிறது. இந்த சூழலில் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.

அதிமுகவை மீட்டெடுப்பேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இது கட்சி மேலிடம் முதல் தொண்டர்கள் வரை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம் சசிகலா ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆங்காங்கே போஸ்டர் ஒட்டுவது, சமூக வலைதளங்களில் ஆதரவான கருத்துகளை வெளியிடுவது என தீவிரமாக இயங்கி கொண்டிருக்கின்றனர்.

சசிகலாவின் செயலுக்கு அதிமுக மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சசிகலா உடன் தொலைபேசியில் பேசியவர்கள், ஆதரவாக செயல்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளும் அனல்பறந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூரில் மாநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வலுவும், செல்வாக்கும் பெற்று விளங்குகிறது. அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் கட்சிக்குள் சசிகலா ஏற்படுத்தும் குழப்பத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. பின்னர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா இல்லை.

No comments:

Post a Comment

Post Top Ad