அமித் ஷாவை கடுப்பேத்திய பிடிஆர்; டெல்லிக்கே ஆட்டம் காட்டிய திமுக!
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதையடுத்து ஆளுநர் உரை மீது நடைபெற்ற விவாதத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், கடந்த முறை ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியில் ‘நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்’ என்றிருந்தது.
வெடிக்கும் ஜெய்ஹிந்த் சர்ச்சை
ஆனால் இந்த முறை ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அதாவது சுய மரியாதை, மாநில சுயாட்சி குறித்து பேசி வரும் திமுக, ’இந்தியாவின் வெற்றி’ என்பதை குறிக்கும் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறது என்ற அர்த்தத்தில் பேசியிருப்பதாக தெரிகிறது. எம்.எல்.ஏ ஈஸ்வரனின் பேச்சிற்கு பாஜக, பாஜக ஆதரவாளர்கள், தேசியவாதிகள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏனெனில் ஜெய்ஹிந்த் என்பது செண்பகராமன் என்ற தமிழரால் உருவாக்கப்பட்ட வார்த்தை.
No comments:
Post a Comment