லண்டன் புறப்படும் மு.க.ஸ்டாலின்? என்ன காரணம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 18, 2021

லண்டன் புறப்படும் மு.க.ஸ்டாலின்? என்ன காரணம்?

லண்டன் புறப்படும் மு.க.ஸ்டாலின்? என்ன காரணம்?



முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு நாள்கள் பயணமாக டெல்லி சென்று திரும்பியுள்ளார். முதலமைச்சராக பதவியேற்றபின் முதன்முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்ததால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டுகிறது என்பதை டெல்லி பயணமும் பிரதமரிடம் அவர் கொடுத்த கோரிக்கைகளும் எடுத்துக் காட்டுகின்றன. நீட் தேர்வு, எட்டு வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்திவந்த ஸ்டாலின் பிரதமரிடமும் அதை வலியுறுத்தியுள்ளார்.


பிரதமர் மோடியும் ஸ்டாலினுக்கு அளித்த வரவேற்பும் வழங்கிய பாதுகாப்பும் கவனம் பெற்றது. உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என கலைஞர் வழியில் செல்லும் ஸ்டாலின் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துவிட்டு ஊர் திரும்பினார். ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் செல்லவுள்ளதாகவும் கூறுகிறார்கள். லண்டன் பயணத்துக்காக அனுமதி கோரப்பட்ட நிலையில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad