தமிழகத்தில் அடங்கிய கொரோனா! இன்று எத்தனை பேர் பாதிப்பு?
தமிழகத்தில், இன்று ஒரே நாளில், 5 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5 ஆயிரத்து 755 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,297 பேர் ஆண்கள், 2,458 பேர் பெண்கள்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 55 ஆயிரத்து 332 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 350 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 698 பேருக்கும், ஈரோட்டில் 597 பேருக்கும், சேலத்தில் 398 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment