டீன் ஏஜ் வயதில் இருப்பவர்கள் உடல் எடை குறைக்க செய்ய வேண்டியது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

டீன் ஏஜ் வயதில் இருப்பவர்கள் உடல் எடை குறைக்க செய்ய வேண்டியது என்ன?

டீன் ஏஜ் வயதில் இருப்பவர்கள் உடல் எடை குறைக்க செய்ய வேண்டியது என்ன?

டீன் ஏஜ் வயதினர் பெரும்பாலும் சுவையான உணவுகளை நாடுவதுண்டு. பெரும்பாலும் வறுத்த உணவுகள், சோடாக்கள் போன்றவற்றுக்கு அடிமையாகி இருப்பவர்கள் அதிகம் உண்டு.
உலக சுகாதார அமைப்பின் படி பதின்மவயதினரில் 10 பேரில் ஒருவர் மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக அதிக எடை அல்லது உடல் பருமனை கொண்டிருக்கிறார்கள்.
இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் மூட்டு பிரச்சனைகள் அபாயத்தை அதிகரிக்கும். பெரும்பாலும் டீன் ஏஜ் உடல் பருமன் வயது வந்த பிறகும் அவர்களது வாழ்க்கையை பாதிக்கிறது. பதின்ம வயதினர் எடையை கட்டுக்குள் வைக்கவும். ஆரோக்கியமான எடையை கொண்டிருக்கவும் செய்ய வேண்டிய குறிப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்
சோடாக்களில் தினசரி எடுத்துகொள்ள வேண்டிய அளவை விட அதிக சர்க்கரை உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு நோயை உண்டாக்குகிறது.

உங்களுக்கு சோடா பிடித்தால் செயற்கையை தவிர்த்து இயற்கையாக வீட்டில் எலுமிச்சை, ஐஸ்கட்டி, பெர்ரி சாறு, புதினா கலந்து தயாரித்து பயன்படுத்துங்கள்.
ஜங்க் ஃபுட் என்னும் குப்பை உணவுகள் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் கொண்டுள்ளன. மேலும் கலோரிகள், உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளன. இது உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்யலாம். இந்த கொழுப்பை கரைய செய்வது அதிக சிரமமாக இருக்கும். அதனால் உடல் எடையை குறைக்க விரும்பினால் ஜங்க் ஃபுட் உணவை தவிர்ப்பது முக்கியம்.


No comments:

Post a Comment

Post Top Ad