ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தடை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தடை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தடை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!


எவ்வளவுதான் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டாலும் ஏடிஎம் கொள்ளைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏடிஎம் கார்டையும் PIN நம்பரையும் திருடி பணத்தைக் கொள்ளையடிக்கும் காலம் மாறி, இப்போது புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கின்றனர். சிசிடிவி கேமிரா, அலாரம், செக்யூரிட்டி அதிகாரிகள் போன்ற பல அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டாலும் ஏடிஎம் கொள்ளையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் ரூ.48 லட்சத்தை இரண்டு கொள்ளையர்கள் திருடிச்சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் பணம் எடுக்கத் தடை விதித்திருந்தது. அதற்குப் பதிலாக ஏடிஎம் இயந்திரங்களில் மட்டும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஏடிஎம் மையங்களிலும் இதுகுறித்து போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஏடிஎம் இயந்திரங்களிலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad