அடிச்சது சிக்ஸர்... ஆனால் பேஸ்ட்ஸ் மேட் அவுட்... எப்படி தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

அடிச்சது சிக்ஸர்... ஆனால் பேஸ்ட்ஸ் மேட் அவுட்... எப்படி தெரியுமா?

அடிச்சது சிக்ஸர்... ஆனால் பேஸ்ட்ஸ் மேட் அவுட்... எப்படி தெரியுமா?


ஒரு கிரிக்கெட்டருக்கு அதுவும் பேட்ஸ்மேன்களுக்கு தன் வாழ்வில் சிறப்பான சிக்ஸ்களை அடிக்க வேண்டும் என்பதே முக்கியமான நோக்கமாக இருக்கும். அப்படியாக அவர்கள் விளையாடும் போது அடிக்கும் சிக்ஸ்கள் மைதானத்தை விட்டே வெளியே சென்றுவிட்டால் அந்த சந்தோஷத்தை யாராலும் வருணிக்கமுடியாது. ஒரு கிரிக்கெட்டரின் வாழ்நாள் சாதனையாக அந்த சிக்ஸர் அமைய கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஒரு பேட்ஸ்மேன் சிக்ஸ் அடிக்க அந்த சிக்ஸே அவருக்கே தீங்காக மாறிவிட்டது.


லண்டனில் உள்ள இல்லிங்க்ஸ் ஒர்த் என்ற பகுதியில் செயின்ட மேரிஸ் கிரிக்கெட் கிளப் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஞாயிற்று கிழமை சொவர்பை செயின்ட் பீட்டர் கிரிக்கெட் கிளப் உடன் ஹெலிபேக்ஸ் கோப்பை காலிறுதி போட்டி நடந்தது இந்த போட்டியில் ஆசிப் அலி என்ற பேட்ஸ்பேன் களத்தில் நின்று ஆடினார். அப்பொழுது அவருக்கு வீசப்பட்ட பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். பந்தும் இவர் அடித்ததும் மிக வேகமாக சென்று பவுண்டரிகோட்டை கடந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அந்த பந்து அங்கிருந்த காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தது. அந்த கார் வேறு யார் காருமில்லை அந்த சிக்ஸரை அடித்த ஆசிப் அலி என்பவரது கார் தான்.

சிக்ஸர் அடித்த வேகத்தில் பந்தை பார்த்த அவர் து அதன் காரின் கண்ணாடியை உடைத்ததை கண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு ரியாக்ஷனை செய்தார். இது அந்த மேட்சை வீடியோ எடுத்ததில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை அந்த மைதானத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. மேலும் அதே பக்கத்தில் அவரின் காரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த ட்வீட் தற்போது வைரலாகி பலரை கவர்ந்து வருகிறது. பலர் இது குறித்து கருத்து தெரிவித்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad