கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி: ராகுல் காந்தி காட்டம்!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது.
நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது. ராமர் கோயில் கட்டும் திருப் பணிக்கு நன்கொடை திரட்டும் பணி கடந்த ஜனவரி 15ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, இதுவரை ரூ.2,100 கோடி அளவுக்கு நிதி வசூலாகியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதில், மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களிடம் நிதி வசூலித்து நிர்வகித்து வரும் அறக்கட்டளை தனது பெயரில் நிலம் வாங்கியிருப்பது
பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment