தாராவியில் "ஜீரோ"வாகிய கொரோனா!
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவியில், இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நாளிலிருந்து பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் மஹாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. முதல் அலையை விட, கொரோனா இரண்டாவது அலை மஹாராஷ்டிர மாநிலத்தை கடுமையாக தாக்கி விட்டது.
முழு ஊரடங்கை மஹாராஷ்டிர மாநில அரசு அமல்படுத்தியதன் விளைவாக, தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு சுமார் 70 ஆயிரம் என இருந்த நிலையில், தற்போது 8 ஆயிரமாக குறைந்துள்ளது
No comments:
Post a Comment