கூடிய சீக்கிரம் நல்ல முடிவு; சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

கூடிய சீக்கிரம் நல்ல முடிவு; சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

கூடிய சீக்கிரம் நல்ல முடிவு; சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று தொடங்கியது. இன்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி இங்கே பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனர் ராமதாஸ், இவர் மூலமாக ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார்.

அதிலே அவர் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இதனுடைய முக்கியத்துவத்தை, இதிலுள்ள பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, நிறைவாகக் குறிப்பிடுகிற போது, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும்,

நிச்சயமாக ஒரு நல்ல முடிவு
அதற்குத் தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும் கேட்டிருக்கிறார். நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கொரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம்.

ஆகவே, மாண்புமிகு உறுப்பினருடைய கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய துறையினுடைய அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment

Post Top Ad