மல்லையா, நிரவ் மோடி, சோக்சியின் சொத்துகள் வங்கிகளுக்கு மாற்றம்!
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர், வங்கிகளில் மோசடி செய்து விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். இவர்களின் மோசடியாக, இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளுக்கு 22 ஆயிரத்து 585.83 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் தஞ்சம் புகுந்தனர். மெகுல் சோக்சி, ஆன்டிகுவா தப்பி சென்றார். அங்கிருந்து கியூபாவிற்கு தப்ப முயன்ற போது டொமினிக்காவில் பிடிபட்டு சிறையில் உள்ளார்.
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை, லண்டன் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், அவர் நாடு கடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.
No comments:
Post a Comment