வெளுத்தக் கட்டப் போகும் கனமழை; இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்க!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக இன்று (23.06.2021) தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை (24.06.2021) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள்
மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும். இதையடுத்து வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
No comments:
Post a Comment