இன்று மாலைக்குள் கொரோனா நிகழ்த்தப் போகும் விபரீதம்; அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிக பாதிப்புகளைச் சந்தித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு நேற்று புதிதாக 13,659 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 3 மாதங்களில் இல்லாத மிகக்குறைந்த எண்ணிக்கை ஆகும். புதிதாக 741 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்புகள் 99,512ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலைக்குள் ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது.
உலகில் கொரோனா உயிரிழப்புகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 7ஆக இருக்கிறது. அந்த வரிசையில் மகாராஷ்டிராவும் இணையப் போகிறது என்பது அதிர்ச்சியூட்டுகிறது. அதேசமயம் கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மகாராஷ்டிரா படிப்படியாக மீண்டு வருவதைக் காண முடிகிறது. மும்பையில் தொடர்ந்து 4வது நாளாக 900க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
பலி எண்ணிக்கை 29 என்ற நிலையை அடைந்துள்ளது. மும்பையின் மொத்த கொரோனா பாதிப்புகள் 7.09 லட்சமாக இருக்கிறது. பலி எண்ணிக்கை 14,951ஆக காணப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், மும்பை படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. புதிய பாதிப்புகள் 900 என்ற அளவிலேயே உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
கருப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைகோசிஸ் பாதிப்பும் கடந்த இரு வாரங்களில் இல்லாத அளவு தற்போது குறைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், கடந்த இரு வாரங்களில் புதிய பாதிப்புகள், பலி எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது.
சுகாதார கட்டமைப்புகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனாவை சிறப்பான முறையில் எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எந்தவொரு விஷயத்திற்கும் தட்டுப்பாடு கிடையாது என்று குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment