ஒரே நாளில் 31 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. ஒன்றிய அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

ஒரே நாளில் 31 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. ஒன்றிய அரசு அறிவிப்பு!

ஒரே நாளில் 31 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. ஒன்றிய அரசு அறிவிப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இன்று ஒரே நாளில் 31 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று ஒரே நாளில் 31,20,451 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று வரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 23 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்று போடப்பட்ட 31 லட்சம் தடுப்பூசிகளில் 18 முதல் 44 வயது வரம்பிலானவர்களில் 16,19,504 பேர் முதல் டோஸும், 41,058 பேர் இரண்டாம் டோஸும் போட்டுக்கொண்டுள்ளனர்.

37 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் ஒட்டுமொத்தமாக 2,76,35,937 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 1,60,406 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, பீஹார், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 18 முதல் 44 வயது வரம்பிலானவர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad