இன்று சூரிய கிரகணம்: யாரெல்லாம் பார்க்க முடியும்? நாசா வெளியிட்ட தகவல்!
2021ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் கடந்த மாத இறுதியில் (மே 26) நிகழ்ந்த நிலையில் அடுத்த சில நாள்களில் முதல் சூரிய கிரகணம் இன்று (ஜூன் 10) நிகழ்கிறது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இன்று (ஜூன் 10) நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின்போது சூரியனை முழுமையாக மறைக்கும் தூரத்தில் நிலவு இருக்காது என்பதால், சூரியன் நிலவை மறைக்கும் போது சூரியன் நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது என்கிறார்கள். இந்தியாவில் பெரும்பாலானோர் பார்க்க முடியாது. லடாக், அருணாச்சல பிரதேசத்தில் உள்ளவர்கள் மட்டும் சில நிமிடங்கள், சிறிய அளவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சில பகுதிகள், வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும்.
No comments:
Post a Comment