ஸ்வீட் எடு கொண்டாடு, பெட்ரோல் லிட்டர் நூறு ரூபா: புதுச்சேரி மாணவர்கள் அலப்பறை!
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக 11 மாநிலங்களில் நூறு ரூபாயை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எட்டியுள்ளது.
இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
இதனைக் கண்டிக்கும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி நகரகுழு சார்பாக ஆம்பூர் சாலையில் உள்ள ஆசிரம பெட்ரோல் பங்க் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து நகரகுழு தலைவர் ரஞ்சித் தலைமையில் பெட்ரோல் போட வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பியும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
No comments:
Post a Comment