படிப்புக்கு உதவி கேட்ட சிறுமி.. உதயநிதி கொடுத்த சூப்பர் பரிசு!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைத்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பின் அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியிலும் பிற இடங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளில் படு பிஸியாக செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாடுகளுக்கு சேப்பாக்கம் தொகுதி மக்களிடையே வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்துள்ளன.
இந்நிலையில், திருவல்லிக்கேணியை சேர்ந்த சிறுமி சுவலட்சுமி தனது உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்காக உதயநிதியிடம் வழங்கியுள்ளார். மேலும், தனது ஆன்லைன் கல்விக்கு உதவுமாறு உதயநிதியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு டேப் பரிசாக அளித்து அசத்தியுள்ளார் உதயநிதி.
No comments:
Post a Comment