படிக்குற வயசுல கஞ்சா கேட்குதா? -காலேஜ் பையனை வெட்டி சாய்த்த உறவினர்!
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக் (20). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கார்த்திக் சில மாதங்களாகவே கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் அதிகமாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அவரது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் கருத்தப்பாண்டி (37) இதனை நீண்ட நாட்களாக கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று, ஆய்க்குடியில் இருந்து ஊர்மேல் அழகியான் கிராமத்துக்குச் செல்லும் குறுக்கு வழிச் சாலையில் கார்த்திக் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த கருத்தப்பாண்டி, அரிவாளால் கார்த்திக்கை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து, கை மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்ட கார்த்திக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
No comments:
Post a Comment