நாட்டையே சோகமாகிய கேரள பெண்ணின் மரணம்: கனிமொழி எம்பி வேதனை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 24, 2021

நாட்டையே சோகமாகிய கேரள பெண்ணின் மரணம்: கனிமொழி எம்பி வேதனை

நாட்டையே சோகமாகிய கேரள பெண்ணின் மரணம்: கனிமொழி எம்பி வேதனை

கேரளாவில் வரதட்சணை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாளுக்குநாள் பூதாகரமாக வெடித்து வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்மயா (24) ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவம் பயின்றுள்ளார். இவருக்கும் சஸ்தம்கோட்டா பகுதியைச் சேர்ந்த மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளரான கிரண்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று விஸ்மயா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விஸ்மயா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது உறவினர்களுக்கு வாட்சப் மூலம் கணவன் வீட்டில் கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாகவும், காயங்களுடன் இருக்கும் சில புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதையடுத்து விஸ்மயா வீட்டார் கொல்லம் போலீசில் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஸ்மாயாவுக்கு திருமணம் நடந்தபோது, 100 சவரன் நகை, ஒரு ஏக்கரில் நிலம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான காரை மாப்பிள்ளை கிரண்குமாருக்கு வழங்கியுள்ளனர். ஆனால், வரதட்சணையாக வந்த கார் எனக்கு பிடிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக 10 லட்சம் ரொக்கமாக வழங்கும்படி கிரண்குமார் கேட்டுள்ளார். அதற்கு விஸ்மயா வீட்டில் மறுக்கவே அதன் காரணமாக இளம்பெண்ணை நாளுக்குநாள் அடித்து சித்ரவதை செய்துவந்துளளர் கிரண்குமார்.

ஏற்கனவே தகராறு ஏற்பட்டு தனது சொந்த வீட்டுக்கு வந்து தங்கியிருந்த விஸ்மயா சமாதானமாகி மீண்டும் கணவன் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் வரதட்சணை காரணம் காட்டி விஸ்மயாவை ரத்தம் வரும் அளவிற்கு அடித்து தாக்கியுளளார் கிரண்குமார். இதையடுத்துதான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad