எனக்கு சமைக்கத் தெரியாது, நான் ஏன் கத்துக்கணும்?: நடிப்பு ராட்சசி
தனக்கு சமைக்கத் தெரியவில்லை என்பதை விமர்சித்தவர்களுக்கு தக்க பதில் அளித்திருக்கிறார் வித்யா பாலன்.
நடிக்கத் தெரியவில்லை என்று விமர்சிக்கப்பட்ட வித்யா பாலன் பாலிவுட் பக்கம் சென்றார். தன் அபார நடிப்பால் தனக்கென்று ஒரு பெயர் எடுத்திருக்கிறார். ஹீரோக்களுக்கு ஒரு சம்பளம், ஹீரோயினுக்கு ஒரு மாதிரி சம்பளம் கொடுப்பது குறித்து தைரியமாக பேசியவர் வித்யா பாலன். இந்நிலையில் பெண்களாக இருந்தால் கண்டிப்பாக சமைக்கத் தெரியணுமா என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வித்யா பாலன் கூறியதாவது, பாலின பாகுபாட்டை அனைவரும் எதிர்கொண்டிருக்கிறோம். பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து மட்டும் அல்ல பெண்களிடம் இருந்தும் கூட பாகுபாடு இருக்கிறது. பெண்கள் சக பெண்களையே விமர்சிப்பது அதிகம் உண்டு. எனக்கும் அது நடக்கிறது. அப்பொழுது எல்லாம் எனக்கு கோபம் வரும். பதிலுக்கு திருப்பிக் கொடுப்பேன். தற்போது அது குறைந்திருக்கிறது என்றார்.
சமையல் செய்ய கற்றுக் கொள் என்று என் அம்மா கூறியது உண்டு. அப்பொழுது எல்லாம், நான் ஏன் சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்பேன். நான் நன்றாக சம்பாதித்து சமையலுக்கு ஆள் வைப்பேன் இல்லை என்றால் சமைக்கத் தெரிந்த நபரை திருமணம் செய்து கொள்வேன் என்று அம்மாவிடம் கூறினேன் என வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment