நாளை வரை மட்டுமே! Flipkart-ல கம்மி விலைக்கு Phone வாங்க லாஸ்ட் சான்ஸ்!
பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அதன் மொபைல்ஸ் போனான்ஸா என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.
இதனொரு பகுதியாக ஐபோன் 11 ப்ரோ, ரியல்ம நார்சோ 30 புரோ 5 ஜி, மற்றும் போக்கோ எம் 3 உள்ளிட்ட பல்வேறு பிரபலமான ஸ்மார்ட்போன்களின் மீது விலைகுறைப்புகள், எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் நான்கு நாட்களுக்கு நடக்கும் இந்த விற்பனை வருகிற ஜூன் 24 ஆம் தேதி வரை நீடிக்கும்.
சில பிரபலமான மாடல்களைத் தவிர, இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் கீழ் மோட்டோரோலா ரேஸ்ர் (2019) மற்றும் ரேஸ்ர் 5 ஜி போன்ற ஸ்மார்ட்போன்களில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் மற்றும் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
வழக்கமான தள்ளுபடிகளுக்கு மேலதிகமாக, பிளிப்கார்ட் மொபைல்ஸ் போனான்ஸா விற்பனையானது 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் (ரூ.1,000 வரை) வழங்குகிறது. இதற்காக நீங்கள் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளை நிகழ்த்த வேண்டும்.
மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி கொள்முதல் செய்வதிலும் ரூ.500 தள்ளுபடி கிடைக்கும். மேற்குறிப்பிட்ட இரண்டு சலுகைகளுக்கு குறைந்தபட்ச பரிவர்த்தனை தொகை ரூ.5,000 ஆகும்.
No comments:
Post a Comment