தமிழகத்தில் ஊரடங்கு, மதுக்கடைகள் அதிரடியாக மூடல் - முதல்வர் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

தமிழகத்தில் ஊரடங்கு, மதுக்கடைகள் அதிரடியாக மூடல் - முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் ஊரடங்கு, மதுக்கடைகள் அதிரடியாக மூடல் - முதல்வர் உத்தரவு!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக கடந்த மே மாதம் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தினசரி பாதிப்புகள் வேகமாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பல்வேறு கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவையும் அடங்கும். இந்நிலையில் டாஸ்மாக் திறக்கப்படாத கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட குடிமகன்கள் வேறு மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கோவை அருகே உள்ள கேரள மாநிலத்தின் பாலக்காட்டிற்கு தமிழக குடிமகன்கள் சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர். அங்கு பல மணி நேரம் காத்திருந்து மது வாங்கி செல்லும் நிலை காணப்படுகிறது. இவர்கள் நெடுஞ்சாலைகளில் வந்தால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று கருதி, வனப்பகுதி வழியாக சென்று வருவதாக சொல்லப்படுகிறது.

இதையொட்டி தமிழக - கேரள எல்லைப் பகுதியில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். கோவையில் இருந்து வாளையார் வனப்பகுதி வழியாக கேரள மாநில கிராமங்களுக்குள் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல புது வழியை கடத்தல்காரர்கள் உருவாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையே மதுபிரியர்களும் தற்போது பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.


இந்நிலையில் கேரள மாநிலத்தில் கோவிட்-19 தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் நாளை (ஜூன் 24) முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார்.
மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு
அதன்படி, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு அதிகபட்சமாக 15 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் இருமாநில எல்லையோர மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மதுபிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad