சளி, தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம்..!
மூக்கில் நீர் வடிதல் குணமாக மிளகு:-
‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்!’ என்பது பழமொழி. ஒவ்வாமைக்கு சிறந்த மருந்து மிளகு. சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைகளுக்கும் இது மருந்தாகின்றது. ஒவ்வாமையால் ஏற்படும் தொடர் சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தும்மல் போன்ற பிரச்சனைகளுக்கு மிளகை பயன்படுத்தலாம். ஆகவே 10 மிளகை எடுத்து நன்றாக இடித்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்துங்கள், பின் இடித்த மிளகை நீரில் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டவும். மிதமான சூட்டில் தேவையான அளவு தேன் கலந்து பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தும்மல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
சளி மூக்கடைப்பு நீங்க:-
வேப்பிலை பொதுவாக ஒரு கிருமிநாசினி பொருள், இயற்கையாகவே ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. மேலும் மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது. ஆகவே ஒரு கைப்பிடி அளவுல வேப்பிலையுடன் சிறிதளவு ஓமம் சேர்த்து நன்கு மைபோல் அரைக்கவும். பிறகு இந்த பேஸ்டை புறடி, நெற்றி போன்ற பகுதியில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மூக்கில் நீர் வடிதல், சைனஸ், ஆஸ்துமா, தலையில் நீர் கோர்த்துக்கொள்வது, தும்மல் போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளும் குணமாகும்.
மூக்கில் நீர் வடிதல் குணமாக
இரவில் படுக்கும் முன் திரிகடுக சூரணம் எனும் சுக்கு மிளகு திப்பிலி சூரணத்தை 5 கிராம் எடுத்து 10 மிலி தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர சளி, இருமல், தும்மல், தொண்டை வலி, மூக்கடைப்பு மற்றும் மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
மூக்கடைப்பு குணமாக:-
இரவு உறங்குவதற்கு முன் சிறிய அளவுள்ள ஒரு விரலி மஞ்சளை எடுத்து கொள்ளுங்கள். இதனை விளக்கில் காட்டி எரித்து அவற்றில் இருந்து வரும் புகையை நன்கு சுவாசிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் மூக்கடைப்பு நீங்கும்.
No comments:
Post a Comment