ஜனாதிபதி ஆவேனு கனவுல கூட நெனச்சது இல்ல"
கிராமத்தில் பிறந்த நான், குடியரசுத் தலைவர் ஆவேன் என கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை என, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக, கான்பூரில் உள்ள சொந்த ஊரான பரான்க் கிராத்திற்கு சென்றார். பரான்க் கிராமம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தான் பிறந்த ஊருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மண்ணை தொட்டு வணங்கினார்.
No comments:
Post a Comment