தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை (ஜூன் 28) முதல் அமலுக்கு வருவதாக ஏற்கெனவே அரசு அறிவித்தது. இதற்கிடையே பொதுமக்கள், வணிக சங்கங்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள், கருத்துகளின் அடிப்படையில் கூடுதல் தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி, வகை 2 மாவட்டங்களில் மட்டும் துணிக் கடைகள், நகைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதியின்றி செயல்பட அனுமதிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment