கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்ட கார்த்தி, அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பலரும் ஜூம் செய்து பார்த்திருக்கிறார்கள்.கொரோனாவின் இரண்டாம் அலை எப்பொழுது தான் முடியுமோ என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்து மூன்றாவது அலை வரப் போகிறது என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.உயிர் காக்க தடுப்பூசி தான் ஒரே வழி என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பிரபலங்கள் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். தாங்கள் புகைப்படம் வெளியிட்டால் அதை பார்த்து தங்கள் ரசிகர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை தான்.
இந்நிலையில் கார்த்தி தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன் #CovidVaccine என்றார்.கார்த்தி வெளியிட்ட புகைப்படத்தை பலரும் ஜூம் செய்து பார்த்திருக்கிறார்கள். என்னத்துக்கு ஜூம் செய்யணும் என்று நினைக்கிறீர்களா?. நர்ஸ் கையில் நிஜமாகவே ஊசி இருக்கிறதா இல்லை டூப்புக்கு போஸா என்பதை பார்க்கத் தான்.
யாராவது தடுப்பூசி போடுவது போன்று சும்மா போஸ் கொடுப்பார்களா என்று நினைக்கலாம். நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் நர்ஸ் கையில் ஊசியே இல்லையே என்றார்கள்.
இதையடுத்து நர்ஸ் தன் விரல்களால் ஊசியை மறைத்துவிட்டதாக நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பிறகே எந்த பிரபலம் தடுப்பூசி புகைப்படத்தை வெளியிட்டாலும் ஜூம் செய்து நர்ஸ் கையில் ஊசி இருக்கிறதா என்பதை பார்க்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, சிறு வயது சூர்யாவை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. தம்பி புகைப்படத்தை ஜூம் செய்து பார்ப்பவர்கள், அண்ணன் புகைப்படத்தை லைக் செய்வதுடன், ஷேரும் செய்கிறார்கள்.
No comments:
Post a Comment