தமிழகத்தில் மீண்டும் ரயில், விமானச் சேவை; வெளியான சூப்பர் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 11, 2021

தமிழகத்தில் மீண்டும் ரயில், விமானச் சேவை; வெளியான சூப்பர் நியூஸ்!

தமிழகத்தில் மீண்டும் ரயில், விமானச் சேவை; வெளியான சூப்பர் நியூஸ்!


ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து ரயில், விமானச் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கோவிட்-19 தினசரி புதிய பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. இதையொட்டி ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் இ-பதிவு உடன் மாவட்டங்களுக்கு இடையில் கார்கள் மூலம் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள், விமானங்கள் மூலம் செல்ல விரும்புவோருக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.தளர்வுகளால் பயணம் செய்ய ஆர்வம்

இதன் காரணமாக வெளியூர் பயணம் செய்ய அதிகப்படியான மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். பயணிகளின் வரத்து அதிகரிப்பை கருத்தில் கொண்டு ரயில், விமானச் சேவையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகமும், விமான நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் சென்னை விமான நிலையத்தில் சுமார் 100 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.விமானச் சேவை அதிகரிப்பு


இந்த எண்ணிக்கை மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் 30 முதல் 35 விமானங்களாக குறைந்தன. அதன்பிறகு பயணிகள் வருகை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஜூன் 9ஆம் தேதி நிலவரப்படி 44 விமானங்கள் செயல்படத் தொடங்கின. அதில் பெங்களூருவிற்கு 5, மும்பைக்கு 4, டெல்லிக்கு 8 விமானங்களும் அடங்கும்.கடந்த மாத இறுதியில் 1,700 முதல் 2,000 பயணிகள் வரை பயணம் செய்த நிலையில், கடந்த வாரம் 3,200 பேராக அதிகரித்துள்ளது. அதாவது தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து வெளிமாநிலங்களில் இருந்து பலரும் சென்னைக்கு திரும்ப ஆர்வம் காட்டியுள்ளனர்.இதேபோல் பயணிகள் வருகை அதிகரிப்பால் ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு ரயில்களை டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தெற்கு ரயில்வே மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது. மேலும் பிற மாநிலங்கள் செல்லும் ரயில்களில் அதிகப்படியான பெட்டிகளை இணைத்தும் சேவை வழங்கி வருகிறது. புதிதாக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad