கொடைக்கானல் கானுயிர் சரணாலயத்துக்கு ஆபத்து: சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கடிதம்!
பாதரச மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள கொடைக்கானல் ஆலை பகுதியில் உள்ள பாதரசத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவை நிறைவேற்றுவதில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தோல்வி கண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிவில் சொசைட்டி செயல்பாட்டாளர்கள் தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆலை நிர்வாகம் சட்டவிரோதமாகச் செய்துகொண்டிருக்கும் பாதரசத்தை அகற்றும் வேலையை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் சுற்றுச்சூழல் அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்
01.11.2018 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இரண்டு உத்தரவுகளை அளித்தது. (1) தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து செல்லத்தக்க அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின்னரே பாதரசத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். (2) மிக விரிவான வகையில் பகுதியைப் பற்றிய மதிப்பீடும், உயிர்ச்சூழல் அபாயம் குறித்த மதிப்பீடும் செய்யப்பட வேண்டும்
No comments:
Post a Comment