"பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்"
பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசின் பொது சுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா, வேண்டாமா என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்து விட்ட நிலையில், குழப்பம் நீடித்து வருகிறது. இதனால், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட முன்வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில், தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் க. குழந்தைசாமி பேசியதாவது:
கொரோனா வைரசின் இரண்டாம் அலை கோர தாண்டவமாடி வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமே மூன்றாம் அலையின் தாக்கத்தை குறைக்க முடியும். கொரோனா தொற்று ஏற்பட்டு எந்த பாதிப்பும் இல்லையெனில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஆக்சிஜன் அளவு 94க்கு குறைந்தால் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.
இணை நோய்கள் ஏற்பட்டவர்கள் மட்டும் கட்டாயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment