தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் | Meditation Benefits in Tamil
தியானத்தால் ஏற்படும் பலன்கள் | Benefits of Meditation in Tamil
Meditation Benefits in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் தியானம் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுவோம். தியானம் என்றால் அமைதி என்பது பொருளாகும். நாம் தியானம் செய்யும் போது அந்த இடமானது அமைதியான நிலையில் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் செய்யும் தியானமானது முழுமடையும். சரி இப்போது தியானம் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுவோம்..!
யோகா வகைகள் மற்றும் பயன்கள்..!
தியானம் பலன்கள்:
யோகா மற்றும் தியானம் செய்து வந்தால் மன அழுத்தம் வெளியேறும். சிலருக்கு மன அழுத்தம், அதிகமாக கோபம், தனிமை போன்ற பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தியானம் செய்தால் மன அழுத்தம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
தியானம் கற்கும் ஆற்றலையும், ஞாபக திறனையும் அதிகரிக்க செய்யும். தியானம் செய்து வந்தால் கவன சிதறல் பிரச்சனை ஏற்படாது.
சிலருக்கு எப்போதும் தலை வலி, உடலில் வலி போன்றவை இருந்துக்கொண்டே இருக்கும். இது போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட தியானம் செய்யலாம்.
தினமும் தியானம் செய்து வந்தால் மனதில் தேவையில்லாத பதற்றம், அச்சம், மனதில் சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
உடல் எடை குறைய யோகாசனம்..!
உடலில் இரத்த கொதிப்பு, திடீர் மாரடைப்பு பிரச்சனைகளை தியானம் செய்வதன் மூலம் தடுக்கலாம்.
தினமும் தவறாமல் தியானத்தினை மேற்கொண்டு வந்தால் ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உடலுக்கு நன்மை அளிக்கும்.
மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க தியானம் செய்யலாம். தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பு: தினமும் 20 நிமிடம் தியானம் செய்து வந்தாலே போதும். நம் உடலும், மனமானது எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
No comments:
Post a Comment