திமுக ஆட்சி ஐந்தே மாதத்தில் முடிந்துவிடும்... டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 9, 2021

திமுக ஆட்சி ஐந்தே மாதத்தில் முடிந்துவிடும்... டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

திமுக ஆட்சி ஐந்தே மாதத்தில் முடிந்துவிடும்... டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தமிழகம் - தமிழ்நாடு எனவும், மத்திய அரசு - ஒன்றிய அரசு என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. திமுக அரசின் இந்த அணுகுமுறைக்கு பல்வேறு தரப்பில் ஆதரவம், எதிர்ப்பும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ' அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தன்னுடைய அறிவுத்திறமையை பயன்படுத்தி, தமிழகத்திற்கு வரவேண்டிய 12,000 கோடி ரூபாயை போராடிப் பெற்றுத் தந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

ஆனால் அதைவிடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பிணக்கை உண்டாக்கும் கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசை ”ஒன்றிய அரசு” எனக் குறிப்பிடுவதும், ”திராவிட நாடு” என்ற பிரிவினை முழக்கமும் உள்ளடக்கத்தில் ஒன்றே அன்றி வேறு வேறு அல்ல.ஏற்கெனவே ”பிரிவினை வாதம்” பேசி 1976, 1990 களில் ஆட்சியை இழந்தது அவர்களுக்கு நினைவில் இல்லாமலா போய்விடும்? இது தொடர்ந்தால் ஐந்து வருடத்திற்குப் பிறகு முடிவுக்கு வரவேண்டிய ஆட்சி ஐந்தே மாதத்தில் முடிவுக்கு வந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுகிறது.

இனியாவது திமுக மற்றும் அதன் அடிவருடிகள் இந்திய அரசியல் சாசனத்தின் அருமை, பெருமைகளைத் தெரிந்து செயல்பட வேண்டும்.

இறையாண்மை மிக்க இந்தியப் பேரரசை ”ஒன்றிய அரசு” எனத் தொடர்ந்து அழைப்பது எட்டுகோடி தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதற்கும், 140 கோடி இந்திய மக்களைச் சீண்டிப் பார்ப்பதற்கும் சமமானதும், சட்டவிரோதமானதும், தேசவிரோதமானதும் ஆகும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad