ரோஹித்துக்கு எதிராக திரும்பிய கோலி…‘காரசார விவாதம்’ விரைவில் பெரிய மாற்றம் இருக்கு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 30, 2021

ரோஹித்துக்கு எதிராக திரும்பிய கோலி…‘காரசார விவாதம்’ விரைவில் பெரிய மாற்றம் இருக்கு!

ரோஹித்துக்கு எதிராக திரும்பிய கோலி…‘காரசார விவாதம்’ விரைவில் பெரிய மாற்றம் இருக்கு!]

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை, நியூசிலாந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி பெரிய மாற்றங்களை சந்திக்கத் தயாராகி வருகிறது. புஜாரா உட்பட பல சீனியர் வீரர்கள் இனி ஓரம்கட்டப்படுவார்கள் என இந்திய அணி நிர்வாகத்துக்கு நெருக்கமான இடங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. போட்டிகள் ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கும். இதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால், இந்திய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் குடும்பத்துடன் ஊர் சுற்றி வருகின்றனர்.

இந்த நேரத்தில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் சில அணித் தேர்வாளர்கள் ஆகியோர் இணைந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

அப்போது கேப்டன் கோலி சில ஆலோசனைகள் வழங்கியதாகத் தெரிகிறது. குறிப்பாக அவர் பேசிய விஷயங்கள் அனைத்தும் வீரர்களின் வயதை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்கிறது. இவர்

ரோஹித் ஷர்மா குறித்து பேசியபோது, ‘அவருக்கு இப்போ 34 வயசு. இப்போதான் ஓபனராக களமிறங்குகிறார். இனிமேலும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தாலும் கூட, இன்னும் எத்தனை ஆண்டுகாலம் இவரால் விளையாட முடியும்? அப்படி தொடர்ந்து விளையாடினாலும் கூட இதே பார்மில் விளையாட முடியுமா?’ எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் பேசிய கோலி, “இவர் 10 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்தார், இப்போது எப்படி இருக்கிறார்? ஃபிட்னஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஓடும்போது மூச்சு வாங்குகிறார். இதனால், களத்தில் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. இதனடிப்படையில் ரோஹித் இனியும் தேவையா என யோசிக்க தோன்றுகிறது” என கோலி கூறியதாகத் தகவல் கசிந்துள்ளது.

இதனால், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும் புஜாராவை ஓரம்கட்டிவிட்டு, கோலியை மூன்றாவது இடத்தில் களமிறக்க முடிவு செய்ப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad