மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் யார் யார்? தமிழக முதல்வர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் யார் யார்? தமிழக முதல்வர் அறிவிப்பு!

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் யார் யார்? தமிழக முதல்வர் அறிவிப்பு!


தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி கருணாநிதி அவர்களால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இது முதல்வரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் பரிந்துரைகள் அளிக்கப்படுகிறது.

இந்த குழுவானது 23.04.2020ல் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்.

கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பொருளாதார மாற்றங்கள் குறித்து ஏறத்தாழ 65 ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். பேராசிரியர் ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராக செயல்படுவார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.


பொருளியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று 30 ஆண்டுகளாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 2006-11 ஆகிய ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்தார். இவருடன் பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து இ.ஆ.ப (ஓய்வு), டி.ஆர்.பி ராஜா,


மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad