திப்பிலி பயன்கள்
கல்லீரல், மண்ணீரல் பிரச்சனையை சரி செய்ய:
நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதும், தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வது, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற செயல்களை கல்லீரல், மண்ணீரல் செய்கின்றன. உடலில் எங்கேயும் அடிபடும் போது, அதிக அலர்ஜியாலும் இந்த இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. இதுபோன்ற வீக்கம் குணமடைய திப்பிலியை பொடி செய்து சாப்பிட்டு வர வீக்கங்களை குணப்படுத்த முடியும்.
மூலம் நோய் குணமாக:
மலச்சிக்கல் பிரச்சனை, இடைவிடாமல் தொடர்ந்து ஓரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மூலம் நோயால் அவதிப்படுபவர்கள் திப்பிலியை நன்றாக பொடி செய்து அதனுடன் குப்பைமேனி செடியை நிழலில் நன்றாக காய வைத்து பொடி செய்து திப்பிலி பொடியுடன் கலந்து சாப்பிட்டு வர மூல நோய் பிரச்சனை முற்றிலும் சரியாகிவிடும்.
சுவாச நோய் குணமாக:
ஆஸ்துமா, பிராங்கைட்டிஸ் (Acute Bronchitis), மார்பு சளி போன்ற கொடிய நோய்கள் நமது நுரையீரலை மிகவும் பாதிப்படைய செய்யும். இது போன்ற நோய் ஏற்பட்டால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இந்த நோய் குணமாக திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலை பாதிக்கும் அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களையும் உடனடியாக சரி செய்யலாம்.
காய்ச்சல் சரியாக:
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்போது காய்ச்சல் ஏற்படுகிறது. உடலில் உண்டாகக்கூடிய காய்ச்சல் நீங்க திப்பிலி, சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்துவர காய்ச்சல் முற்றிலும் நீங்கிவிடும்.
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த:
மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் சோர்வுடன் காணப்படுவார்கள். அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு சேர்த்து பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து மாதவிடாய் நேரத்தில் மூன்று தினங்களுக்கு தினமும் இருவேளை குடித்து வந்தால் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.
No comments:
Post a Comment