டாஸ்மாக் கடைகளை திறப்பதில் புது சிக்கல்; ’குடி’மகன்கள் ஷாக்!
மதுபானக் கடைகள் திறக்கப்படும் முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து முதல்வருக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹைலைட்ஸ்:
தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி
மதுபான வகைகள் சரியாக இருக்கிறதா என தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்.
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இதனுடன் சில புதிய தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் நோய்த்தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி
அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாம் அலை வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு
எனவே திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களிடம் சொல்வது ஒன்று, ஆட்சி வந்த பின்பு சொல்வது வேறொன்றாக உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மே மாதம் 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்
அதன்பிறகான காலகட்டத்தில் மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் சட்டவிரோதமாக அதிக விலை வைத்து விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இந்த குற்றங்களை பணியாளர்கள் மீது சுமத்தி உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பு, மூடப்பட்ட நாளில் தணிக்கை செய்யப்பட்டபடி,
மது வகைகள் சரியாக இருக்கின்றனவா என்று சரிபார்க்க வேண்டும். அதன்பின்னரே கடைகள் திறக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசின் பிற துறைகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment