பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி வாட்ஸ் ஆப் குழுவில் பெற்றோர் பிரதிநிதி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளி மாணாக்கர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இது குறித்து கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்த காரணத்தினால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அனைத்து உயர்கல்வி பள்ளி வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சில நாட்களில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. மேலும் பள்ளி மாணாக்கர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிக அளவில் காணப்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாணாக்கர்களின் கல்வி நலன் கருதி கடந்த ஆண்டை போல் தற்போதும் வாட்ஸ் ஆப் மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அம்மாணாக்கர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வாட்ஸ் ஆப் குழு குறித்து ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி வாட்ஸ் ஆப் குழுக்களில் பாடங்களை தவிர்த்து இதர தகவல்கள் ஏதும் பகிரக்கூடாது என்று தெரிவித்தது. மேலும் முறையாக தலைமை ஆசிரியர்கள் மாணவர்-ஆசிரியர் வாட்ஸ் ஆப் குழுக்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் வாட்ஸ் ஆப் குழுக்களில் பெண் ஆசிரியர் அல்லது பெற்றோர் சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment