பெட்ரோல் விலை: கிட்ட நெருங்கிடுச்சு; அதுக்குள்ள ஒரு ஹேப்பி நியூஸ்!
பெட்ரோல், டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது.
சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.97.43ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் இன்றி ரூ.91.64 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் வேளையில் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாறாதது வாகன ஓட்டிகளுக்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment