அரசு தேர்வுகளில் இனி நேர்முகத் தேர்வு இல்லை - மாநில அரசு அதிரடி
ஆந்திர மாநிலத்தில், குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஆட்சேர்ப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஆந்திர பொதுச் சேவை ஆணையம் மூலம் குரூப் 1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வை தவிர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment