இமயமலையில் ஏழுமலையான் கூடிய சீக்கிரம் சர்ப்ரைஸ்; ஏற்பாடுகள் தயார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 13, 2021

இமயமலையில் ஏழுமலையான் கூடிய சீக்கிரம் சர்ப்ரைஸ்; ஏற்பாடுகள் தயார்!

இமயமலையில் ஏழுமலையான் கூடிய சீக்கிரம் சர்ப்ரைஸ்; ஏற்பாடுகள் தயார்!

ஜம்முவில் உள்ள மஜீன் கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) முடிவு செய்தது. இதற்காக 62.06 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்த இடத்தில் பிரம்மாண்டமான கோயில், பக்தர்களுக்கான வசதிகள், வேத பாடசாலைகள், ஆன்மீக மற்றும் தியான மையங்கள், கோயில் ஊழியர்கள் தங்குமிடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன.

இதன்மூலம் ஜம்முவில் சுற்றுலாத்துறை பெரிதும் வளர்ச்சி அடையும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொருளாதார ரீதியாக அப்பகுதி மக்கள் முன்னேற்றம் அடைவர். வைஷ்ணவி தேவி கோயில், அமர்நாத் கோயில் ஆகியவற்றின் மீது கூடுதலான ஈர்ப்பு ஏற்பட்டு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடமாநில மக்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமியை தரிசனம் செய்ய ஆந்திரா வரை இனி செல்ல தேவையில்லை. இந்நிலையில் கோயில் கட்டப்படும் நிலத்தில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இதில் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷன் ரெட்டி, ஜிதேந்திர சிங், திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி சுப்பா ரெட்டி மற்றும் இதர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் உள்ளூர் அரசியல் தலைவர்கள், உள்ளாட்சி தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அடிக்கல் நாட்டியதை குறிக்கும் கல்வெட்டை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் கட்டுமானத்தை வட இந்திய மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒருவழியாக மாதா வைஷ்ணவி தேவி மண்ணில் ஏழுமலையான் கோயில் அமையவுள்ளது.

இதன்மூலம் மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறி இருக்கிறது. காஷ்மீருக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் இது. வெங்கடேஸ்வரா கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஆன்மீக தலமாக உருவெடுக்கும். இங்கு பணியாற்றும் பூசாரிகள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் உள்ளூர் மக்களாக இருப்பர் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad