கொரோனா தடுப்பு பணிகள் - வரும் 16ல் 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

கொரோனா தடுப்பு பணிகள் - வரும் 16ல் 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணிகள் - வரும் 16ல் 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வரும் 16-ம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநில அரசுகளின் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால், தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்த சூழலை பயன்படுத்தி, தடுப்பூசி போடும் பணிகளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. எனினும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவை தாக்கக் கூடும் என்றும், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவர் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வரும் 16-ம் தேதி காலை 11 மணி அளவில், காணொலி வாயிலாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரிடம், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள், தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வட கிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad