மாமல்லபுரத்தில் ரூ.1.80 கோடி செலவில் சுற்றுலா கிராமம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

மாமல்லபுரத்தில் ரூ.1.80 கோடி செலவில் சுற்றுலா கிராமம்!

மாமல்லபுரத்தில் ரூ.1.80 கோடி செலவில் சுற்றுலா கிராமம்!


பூம்புகார் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தமிழகக் கைவினைஞர்களின் திறமை மற்றும் உழைப்பினால் தயாரிக்கப்படும் பித்தளை, பஞ்சலோகம், மரம் மற்றும் கற்களால் ஆன கைவினைப்பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காகச் செயல்பட்டு வருகிறது.

இக்கழகத்தின் மூலம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியுதவியினைக் கொண்டு ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நகர்ப்புறக் கண்காட்சித்திடலை மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், இத்திடலில் கைவினைக் கலைஞர்களின் விற்பனையை ஊக்கப்படுத்த 36 அரங்குகளும், பொதுமக்களுக்காக உணவுக்கூடங்கள், ஓய்வு அறை, காட்சி அரங்கம், குழயதைகள் பூங்கா, கைவினைஞர்கள் தங்குமிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளையும், கைவினைஞர்களையும் இணைக்கும் வகையில் ரூ.5.61 கோடி செலவில் “கைவினை சுற்றுலாக் கிராமம்” எனும் திட்டம் வகுக்கப்பட்டது.



இதில் முதல் கட்டமாக ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, காரணைக் கிராமத்தில் வசிக்கும் கைவினைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், ஐயதுரத வீதியில் அமையதுள்ள கைவினைஞர்களின் உற்பத்தி நிலையங்களைப் புதுப்பித்தல், மாமல்லபுர நுழைவு வாயிலில் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுவரும் ஸ்தூபி பணிகள் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.
ஆய்வுக்குப்பின் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர், மேற்கொள்ளப்படும் பணிகள் உயர்தரத்துடனும், கலைநயத்துடனும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், மாமல்லபுரச் சிறப்பினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் சிறப்பான முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


No comments:

Post a Comment

Post Top Ad