தமிழகத்தில் வரும் 19ல் +2 ரிசல்ட்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

தமிழகத்தில் வரும் 19ல் +2 ரிசல்ட்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் 19ல் +2 ரிசல்ட்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


தமிழகத்தில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக உள்ளன.

தமிழகம் உட்பட நாடு முழுவதும், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து தனி கமிட்டி அமைக்கப்பட்டு மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


மேலும், மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 22-ம் தேதி காலை 11 மணி முதல், www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad