உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? இத மட்டும் பண்ணுங்க...
பள்ளிக்கே போகாமல் பாடம் நடத்துவதும், தேர்வே எழுதாமல் பாஸ் ஆவதுமான சூழ்நிலை தமிழகத்தில் உருவாகும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கொரோனா போன்ற உயிக்கொல்லி வைரஸில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் பிள்ளைகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நிறையவே உள்ளன. பெற்றோர்கள் தரப்பில் என்னவென்று பார்த்தால்; ஆன்லைன் பாடங்களுக்கென்று பிள்ளைகளுக்கு ஆண்டிராய்டு போன் கட்டாயம் வாங்கி தர வேண்டும்.
அல்லது, ஏற்கனவே வைத்திருக்கும் போனை பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கி தர வேண்டும். மேலும், ஒரே வீட்டில் வெவ்வேறு பிள்ளைகள் வெவ்வேறு பாடங்களில் பங்கேற்கும் பட்சத்தில் பெரும் நெருக்கடி ஏற்படும். பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னவென்றால்; ஆன்லைனில் இருக்கும்போது தேவையின்றி வரும் விளம்பரங்கள், யூடியூபில் முகம் சுளிக்க வைக்கும் வீடியோ ரெக்கமெண்டேஷன்கள் ஆகியவை பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்த சிரமத்தை போக்கவும் வேண்டும், பிள்ளைகளுக்கு அச்சமின்றி செல்போனை வழங்கவும் வேண்டும் என்பதற்காக மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி G.சுகுணா சிங் எளிய வழிமுறை ஒன்றை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment