நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்!


நடப்பாண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அதில் பேசிய ஸ்டாலின், பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்துப் பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டிருந்தேன். அதனைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும் என்று அப்போது முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட ஸ்டாலின், தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், எங்கள் மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கக் கோரியிருக்கிறேன். இந்த முக்கியமான பிரச்சினையில், நான் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன் என்றும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad