என்ன தான் நடக்கிறது கர்நாடகாவில்? - 24 மணி நேரமும் எடியூரப்பாவை சுற்றும் அரசியல் களம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

என்ன தான் நடக்கிறது கர்நாடகாவில்? - 24 மணி நேரமும் எடியூரப்பாவை சுற்றும் அரசியல் களம்!

என்ன தான் நடக்கிறது கர்நாடகாவில்? - 24 மணி நேரமும் எடியூரப்பாவை சுற்றும் அரசியல் களம்!


முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாக கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக, ஆளும் பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். மேலும், எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகி விட்டதால், இளம் தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்மையில் பா.ஜ.க., மேலிடம் அழைப்பின்படி டெல்லி சென்ற கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க., தேசியத் தலைவர் நட்டா ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார்.

அப்போது, தனது உடல் நிலையை காரணம் காட்டி, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தனது மூத்த மகனுக்கு பா.ஜ.க.,வில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தியதாகத் தெரிகிறது. எடியூரப்பாவுக்கு எதிரான மனநிலை கட்சிக்குள் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை அடுத்து, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என, தனது ஆதரவாளர்களை முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேசியதாவது:


கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., ஆட்சி அமைந்து வரும் 26ம் தேதியுடன் 2 ஆண்டுகள் ஆகின்றன. அதை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னால் ராஜினாமா செய்வேன். பா.ஜ.க.,வை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். கட்சித் தலைமையிடமிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. வரும் 25ம் தேதி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad