7 சதவீத வட்டி மானியம்; வியாபாரிகளுக்கு மத்திய அரசு சூப்பர் சலுகை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

7 சதவீத வட்டி மானியம்; வியாபாரிகளுக்கு மத்திய அரசு சூப்பர் சலுகை!

7 சதவீத வட்டி மானியம்; வியாபாரிகளுக்கு மத்திய அரசு சூப்பர் சலுகை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கொரோனா ஊரடங்கால் சாலையோர வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அவர்களுக்கான உதவிகள் குறித்து பாஜக எம்.பிக்களான அபராஜிதா சாரங்கி மற்றும் பி.பி.சவுத்ரி ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கவுஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

ஆத்மநிர்பார் நிதி அறிமுகம்

அதில், நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நிலை குறித்து மத்திய அரசு நன்கு அறியும். இதனைக் கருத்தில் கொண்டே கடந்த ஜூன் 1, 2020ல் பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பார் நிதி (PM SVANidhi) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம்

சாலையோர வியாபாரிகள் தங்களது தொழிலை மீட்டெடுக்க கடன் வழங்கப்படுகிறது.

வியாபாரிகளின் பொருளாதார நிலை

இந்த திட்டத்தின் கீழ் 125 நகரங்களில் சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் ஜனவரி 4, 2021ல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் ஜூலை 18, 2021 நிலவரப்படி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முறையே 4,377 மற்றும் 5,673 தகுதியான நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கடன் வழங்கும் திட்டம்

இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது. இதனை திருப்பிச் செலுத்த ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படும். உரிய நேரத்திலோ அல்லது விரைவாகவோ பணத்தை திருப்பி செலுத்திவிட்டால் இரண்டாம் கட்டமாக 20 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் கட்டமாக 50 ஆயிரம் ரூபாயும் கடனாக வழங்கப்படும். மேலும் உரிய நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிலும் 7 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் திரும்ப வாடிக்கையாளர்களுக்கே அளிக்கப்படும். ஜூலை 18, 2021 நிலவரப்படி ஒடிசாவில் 27,851 பேருக்கும், ராஜஸ்தானில் 53,888 பேருக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad