சென்னையில் 2வது விமான நிலையம்; எங்கே? எப்போது? சரமாரி கேள்வி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

சென்னையில் 2வது விமான நிலையம்; எங்கே? எப்போது? சரமாரி கேள்வி!

சென்னையில் 2வது விமான நிலையம்; எங்கே? எப்போது? சரமாரி கேள்வி!


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாமண்டூர், பரந்தூர் ஆகிய இரு இடங்களை தமிழக அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் அடையாளம் கண்டது. ஆனால் இன்று வரை அவற்றில் ஓர் இடத்தை இறுதி செய்யவில்லை என்று மக்களவையில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது இன்னும் தாமதமாகும் என்று தெரிகிறது. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது தமிழகத்தின் பெருங்கனவு. அதுமட்டுமின்றி மாநிலத்தின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்

அறிவித்து 15 ஆண்டுகள் ஆச்சு

ஆனால், சென்னை இரண்டாவது விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படை பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை. சென்னையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட கொச்சி, ஐதராபாத்,

பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன. விசாகப்பட்டினம் இரண்டாவது விமான நிலையக் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்ட நிலையில்,

அதிகபட்சம் 2.10 கோடி பேர்

அடுத்த சில மாதங்களில் அந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. சென்னை விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 2.10 கோடி பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். கொரோனா பரவல் ஏற்படாமல் இருந்திருந்தால் பயணிகள் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் சென்னை விமான நிலையம் திணறி இருந்திருக்கும். சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கையாளும் திறனை இப்போதுள்ள 2.10 கோடியிலிருந்து


அடுத்த 5 ஆண்டுகளுக்குள்

3.5 கோடியாக உயர்த்துவதற்கான விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் கடந்த ஜூன் மாதத்தில் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், 2022ஆம் ஆண்டு இறுதியில் கூட விரிவாக்கப் பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். புதிய முனையங்களுடன் விமான நிலையம் விரிவாக்கப்பட்டாலும் கூட, அது அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
ரூ.2 கோடிக்கு விநாயகர் கோயில் கட்டிய கிறிஸ்தவர்

அதற்குள்ளாக சென்னை விமான நிலையம் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியை கடந்து விடும். அதனால் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் புதிய விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அது இமாலய முயற்சியாகவே இருக்கும். அதற்கு அடுத்த சில மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad