அரசு பேருந்துகளில் காவல்துறையினர் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

அரசு பேருந்துகளில் காவல்துறையினர் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபு

அரசு பேருந்துகளில் காவல்துறையினர் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபுதமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த திரிபாதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அப்பதவிக்கு ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டு காலம் பொறுப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கும் இளைஞர்களுக்கும் உடல்நலம் மற்றும் உளவியல் குறித்த விழுப்புணர்வை தொடர்ச்சியாக சைலேந்திரபாபு வழங்கிவருவதாலும், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதனாலும் இளைய தலைமுறையினர் இடையே பேராதரவை பெற்றுள்ள பெருமையும் இவருக்கு உண்டு.


மேலும், சட்ட ஒழுங்கை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் தமிழக ரவுடிசத்துக்கு விரைவில் முற்று புள்ளி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு ஒன்றை டிஜிபி சைலேந்திர பாபு வழங்கியுள்ளார். கடந்தாண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு பேருந்து ஒன்றில் ஏறிய தலைமை காவலர் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். அப்போது நடத்துனருக்கும், காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், மன அழுத்தம் உண்டாகி நடத்துனர் கோபிநாத் என்பவர் மாரடைப்பால் உயிரைவிட்டார். இந்த விவகாரம் கடும் கண்டனங்களுக்குள்ளானது.
இந்நிலையில், இதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது பஸ் வாரண்ட் இல்லையென்றால் கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசு பேருந்து நடத்துனர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
டிஜிபி சைலேந்திர பாபு 1977 பேட்ச்சில் ஐ.பி.எஸ் தேர்வாகி சென்னையில் ஜே.சி.யாகவும், கோயம்புத்தூர் நகர ஆணையர் மற்றும் வடக்கு மண்டலத்தில் ஐ.ஜி ஆகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்ற பின்னர் அவர் சிறைச்சாலைகளிலும், கடலோர பாதுகாப்பு குழுவிலும் பணியாற்றினார். அதனை தொடர்ந்து மார்ச் 2019 இல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து ரயில்வேயில் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad