சென்னையில் இன்று உயிரிழப்பு இல்லை... 2 நிமிட வாசிப்பில் இன்றைய கொரோனா நிலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

சென்னையில் இன்று உயிரிழப்பு இல்லை... 2 நிமிட வாசிப்பில் இன்றைய கொரோனா நிலவரம்!

சென்னையில் இன்று உயிரிழப்பு இல்லை... 2 நிமிட வாசிப்பில் இன்றைய கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,52,049 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 22,188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 537386 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 527594 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8312பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று 164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 228504 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 224392 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2165 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 161507 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 157988 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2399 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,42,539 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,59,45,035 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 2,312 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 24,95,895 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 33,966 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad