அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக பஞ்சாயத்து செய்கிறதா? - அண்ணாமலை அசத்தல் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக பஞ்சாயத்து செய்கிறதா? - அண்ணாமலை அசத்தல் விளக்கம்!

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக பஞ்சாயத்து செய்கிறதா? - அண்ணாமலை அசத்தல் விளக்கம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாள் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசியை கேட்டு பெறவே டெல்லி வந்தோம் எனவும், மோடி, அமித் ஷா உடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் செய்தியாளர்களிடம் சத்தியம் செய்யாத குறையாக கூறி வருகின்றனர்.

ஆனாலும் பிரதமர், உள்துறை அமைச்சருடனான சந்திப்பில் சசிகலா விவகாரம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற ரெய்டு உள்ளிட்டவை குறித்து இபிஎஸ, ஓபிஎஸ் ஆகியோர் விரிவாக ஆலோசித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஜெயலலிதா இருந்திருந்தால்,, கட்சி தலைமையை டெல்லி அழைத்து மோடி, அமித் ஷா ஜிக்கள் பேசியிருப்பார்களா? அப்படியே அவர்கள் அழைத்தாலும் டெல்லி போக ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு தைரியம் வந்திருக்குமா என்று ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணத்தை வைத்து, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தொடர்ந்து தலையிடுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) அதிமுக அங்கம் வகிக்கிறது. கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர்.



பிரதமரை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முழு உரிமை உள்ளது. தலைவர்களின் இந்த சந்திப்பை வைத்து, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக எப்படி சொல்ல முடியும்?" என்று அண்ணாமலை அருமையாக விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad